இனி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இந்த விதிமுறையா? உலக கிரிக்கெட் கமிட்டி!

526

கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டி முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த கமிட்டி பரிந்துரைக்கும் விதிமுறைகளை தான் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பெரும்பாலும் அங்கீகரிக்கிறது. மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் கமிட்டியின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன.

இதன் முடிவில் சில பரிந்துரைகளை இந்த கமிட்டி முன் வைத்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

“ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி போன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நோ-பால் வீசினால் பிரீஹிட் வழங்கப்பட வேண்டும். குறுகிய வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் பிரீஹிட் முறை கொண்டு வரப்பட்டதும் நோ-பால் வீசுவது வெகுவாக குறைந்திருக்கிறது.

இங்கிலாந்து அணியின் சமீபத்திய செயல்பாட்டை பார்க்கும் போது, 45 ஒரு நாள் போட்டிகளில் அந்த அணி ஒரு நோ-பால் கூட வீசவில்லை. ஆனால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 11 நோ-பால்களை வீசியிருக்கிறது.

எனவே ‘பிரீஹிட்’ வழங்கப்படும் போது, டெஸ்ட் போட்டியிலும் நோ-பால் வீசப்படுவது குறையும். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் எஸ்.ஜி, கூக்கபுரா, டியூக்ஸ் ஆகிய பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

அடுத்ததாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் ஒரே மாதிரியாக தரமான பந்துகளை பயன்படுத்த வேண்டும். டியூக்ஸ் வகை பந்தை இதற்கு முயற்சித்து பார்க்கலாம்.”

இவ்வாறு கிரிக்கெட் கமிட்டி பரிந்துரை செய்திருக்கிறது. இதை செயல்படுத்துவது குறித்து ஐ.சி.சி. விரைவில் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of