மதிப்பிற்குரிய மோடி அவர்களே தாமதம் உங்களால்தான் – ராகுல்

209
raghul-3.3.19

நம்மிடம் ரபேல் போர் விமானங்கள் இருந்திருந்தால் இன்னும் அதிக சாதனைகளை செய்திருக்க முடியும். முந்தைய அரசின் சுயநலத்தால் நாடு பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது அரசியல் ரபேல் போர் விமானம் பக்கம் திரும்பியிருக்கிறது என விமர்சனம் செய்தார். மேலும், இந்திய விமானப்படையின் தாக்குதலுக்கு எதிர்க்கட்சிகள் ஆதாரம் கேட்கிறது என ஒவ்வொரு மேடையிலும் பேசிவருகிறார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் பதில் அளிக்கையில் ரபேல் விமானம் தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடிதான் காரணம் என குற்றம் சாட்டினார். “ மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே வெட்கம் இல்லையா? நீங்கள் ரூ.30 ஆயிரம் கோடியை திருடி உங்களுடைய நண்பர் அனில் அம்பானிக்கு கொடுத்துள்ளீர்கள். ரபேல் போர் விமானங்கள் இந்தியாவிற்கு வருவதில் தாமதம் நேரிட்டதில் முழு பொறுப்பு நீங்களே. துணிச்சல் மிக்க வீரர் அபிநந்தன் ஏன் பழமையான மிக் ரக விமானத்தை இயக்கப் போகிறார்” என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய விமானப்படையில் ரபேல் போர் விமானத்தை சேர்ப்பதில் தாமதம் ஏற்பட முக்கிய காரணமே பிரதமர் மோடிதான். ஏனென்றால் முந்தைய காங்கிரஸ் செய்த ஒப்பந்தத்தை அவர்தான் ரத்து செய்தார். இப்போது மோடி தனக்குத் தானே கேள்வி எழுப்பி கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி இதற்கு முன்பும் விமானத் தாக்குதல் குறித்து ஆதாரங்களை கேட்கவில்லை. இப்போதும் கேட்கவில்லை என கூறியுள்ளார்.