“இந்த கருவி சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும்” | ISRO | Sivan

281

‘விக்ரம் லேண்டர்’ நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம். அடுத்த 14 நாட்களில் லேண்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் நாங்கள் மேற்கொள்வோம் என்று சிவன் தெரிவித்துள்ளார்.

விக்ரம் லேண்டருடன் தகவல் தொடர்பை இழந்த ஆர்பிட்டர் கருவி சிறப்பாக செயல்பட்டு நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வந்து கொண்டு இருக்கிறது.

இந்த ஆர்பிட்டர் கருவி ஒரு வருடகால பயன்பாட்டிற்காகத்தான் உருவாக்கப்பட்டது. ஆனால் தற்போது அதில் எரிபொருள் அதிகமாக இருப்பதால் சுமார் ஏழரையாண்டுகள் வரை செயல்படும். இதனால், சந்திரயான்-2 திட்டம் கிட்டத்தட்ட 100 சதவீதம் வெற்றியடைந்துள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of