திமுக இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருவதாகிறது – இல.கணேசன்

113

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அருகே குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்தும், அதனை எதிர்க்கும் எதிர்கட்சிகளை கண்டித்து பாஜக சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பாஜக செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், மாநில பொதுச் செயலாளர் நரேந்திரன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட சுமார் 700 பேர் பங்கேற்றனர்.

இதன் ஒருபகுதியாக இல.கணேசன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இல.கணேசன், ஜனநாயக ரீதியில் தான் இந்த குடியுரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக கூறினார்.

திமுக தொடர்ந்து இந்து மதத்தை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வருவதாகவும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு அவர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என மனு அளித்துள்ளதாக கூறினார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of