தாமரையை தாங்கும், இரட்டை இலை

166
tamilisai11.3.19

பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பா.ஜ.க. கொடியேற்று நிகழ்ச்சியில் பங்கேற்று கொடியேற்றி பேசினார்.

தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் வெற்றி பெறக் கூடிய கூட்டணியாக எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. தமிழகத்தில் தாமரையை இரட்டை இலை தாங்கிக் கொண்டிருக்கிறது. மாம்பழமும் பழுத்துக் கொண்டிருக்கிறது. மிக விரைவில் எல்லா கூட்டணியும் அறிவிக்கப்பட்டுவிடும்.

இதைப் பொறுத்துக் கொள்ளாமல் தான் எதிர்கட்சியினர் பதற்றத்தோடு இருக்கிறார்கள். தற்போதைய காலக்கட்டத்தில் பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

50 கோடி மக்களுக்கு இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைக் கொடுத்திருக்கிறார். இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம், 8 கோடி இலக்கு வைத்து இதுவரை 7 கோடி பேருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் கொடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.