சென்னையில் நில அதிர்வு! – சுனாமி அபாயம்?!!

446

சென்னையில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் பலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் பேசும்போது, ‘இந்தியா நேரத்தின் படி காலை 7 மணியளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் சுமார் 600 மீட்டர் தெலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 என்ற அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வானது அந்தமான் மற்றும் சென்னையில் உள்ள நிலநடுக்க பதிவு கருவிகளில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படும் அபாயம் எதுவும் இல்லை’

இவ்வாறு கூறினார்.