நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது – காங்கிரஸ்

205

நாட்டின் பொருளாதாரம் மோசமாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி உள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, நாட்டின் பொருளாதாரம் மோசமான, குழப்பமான நிலையில் இருக்கிறது என்றும், ஆனால் இதை சீர்செய்ய மத்திய அரசு எதுவுமே செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

பொருளாதார விவகாரத்தில் மத்திய அரசு 10 தோல்விகளை கண்டுள்ளது என்று கூறிய அபிஷேக் சிங்வி,  ஆட்டோமொபைல் விற்பனையில் ஓராண்டாக 31 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும், கார்கள் விற்பனை 23 சதவீதமும், இருசக்கர வாகன விற்பனை 12 சதவீதமும், டிராக்டர் விற்பனை 14 சதவீதமும் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

நிதி பற்றாக்குறை அதிகரித்து வரும்நிலையில், அதுபற்றி தவறான புள்ளிவிவரங்களை மத்திய அரசு வெளியிட்டது அம்பலம் ஆகியுள்ளது என்றும் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். மேலும்,  மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வீழ்ச்சி அடைந்துள்ளது  என்றும், அபிஷேக் சிங்வி குற்றஞ்சாட்டி உள்ளார்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of