4 மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் தேதியை இன்று அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

827

புதுடெல்லி: இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த ஆண்டின் இறுதியில் நடக்க விருப்பதால் இப்போதே அந்தந்த மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளில் ஈடுபட கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க உள்ளது. இன்று பிற்பகல் 12 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரமும் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of