மே 23ம் தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை காலாவதியாகி விடும்

222

மேற்கு வங்காளத்தில் இன்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய மோடி, இந்தியாவில் உள்ள பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நமது ராணுவத்தை தாழ்த்தும் வகையில் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 23-ம் தேதியுடன் காலாவதியாகி விடும் என்று தெரிவித்தார்.

நாட்டின் பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் நக்சலைட்டுகள் மற்றும் பிரிவினைவாதிகளுக்கு எதிரான சட்டங்களை காங்கிரஸ் கட்சி எப்போதுமே மழுங்கடித்து வந்துள்ளது. நாங்கள் 1400 புதிய சட்டங்களை உருவாக்கி இருக்கிறோம்.

பாகிஸ்தானுக்குள் புகுந்து நமது விமானப்படை நடத்திய தாக்குதலை சந்தேகித்து ஆதாரம் கேட்பவர்கள் யார்? அது ஒரு போலி தகவல், நாடகம் என்று கேலி பேசியவர்கள், எத்தனை பயங்கரவாதிகளை கொன்றீர்கள் என்று தலை கணக்கு கேட்டவர்கள் எல்லாம் யார்? என்பது உங்களுக்கு தெரியும். நமது வீரர்களை பலவீனப்படுத்த காங்கிரஸ் இப்போதும் முயற்சிக்கிறது. அவர்களின் எண்ணம் நிறைவேற இந்த மோடி எப்போதுமே இடம் கொடுக்க மாட்டான்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of