புகழ்பெற்ற ‘பாப்’ நட்சத்திரம் சியாவுக்கு விசித்திர நோய்

380

ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் பிரபல ‘பாப்’ இசை நட்சத்திரம் சியா (வயது 43). தனது தனிப்பட்ட வாழ்க்கையை இந்தப் பெண் கலைஞர் ரகசியமாக வைத்துள்ளார்.

‘விக்’ என்னும் செயற்கை முடி அலங்காரத்துடன் தலைக்கவசம் அணிந்து தன் முகத்தை இவர் மறைத்து வந்தாலும் இவரது பாடல்களை ரசிப்பதற்கென்று அங்கு ஒரு கூட்டம் இருக்கிறது.

இவர் ‘எட்ஸ்’ என்ற விசித்திர நோயால் அவதிப்படுகிறார் என்று தெரிய வந்து இருக்கிறது.இதை அவரே டுவிட்டரில் போட்டு உடைத்துள்ளார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில் ‘‘நான் வலியால் அவதிப்படுகிறேன் என்பதை உங்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

உடலாலும் உணர்வாலும் வலியால் நான் அவதியுற்றாலும் உங்களை நேசிக்கிறேன். தொடர்வேன்’’ என கூறி உள்ளார். இங்கிலாந்து நாட்டின் தேசிய சுகாதார சேவை சியாவை பாதித்துள்ள எட்ஸ் நோயில் 13 வகை இருப்பதாக சொல்கிறது.

இது உடலைச்சுற்றியுள்ள இணைப்பு திசுக்களை பாதிக்கும் என்றும் கூறுகிறது. இதில் சில வகை லேசான வலியையும் மற்றவை கடுமையான வலியையும் தரும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த காலத்தில் மதுவின் பிடியில் சிக்கி அதில் இருந்து மீண்டவர் சியா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement