தமிழகம் நோக்கி வரும் ஃபானி புயல் – வானிலை ஆய்வு மைய இயக்குனர்

473

வங்கக்கடலில் உருவாகிவரும் புயல் சின்னம் குறித்து சென்னையி்ல் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நாளை முதல் உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறினார்.

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, பின்னர் வலுவடைந்து, தாழ்வு மண்டலமாக ஏப்ரல் 26-ம் தேதி மாறும் என்றும் கூறினார். ஏப்ரல் 27, 28-ம் தேதிகளில் புயலாக வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த புயலுக்கு ஃபானி என பெயர்சூட்டப்பட்டிருக்கிறது என்றும் அவர் கூறினார். புயல்சின்னம் வலுவடையும் போது கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் ஏப்.26-ம் தேதி முதல் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of