குறைதீர் கூட்டத்தில் விவசாயிகளை திருடன் என்று கூறியதால் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து வாக்கு வாதம்

643

ராமநாதபுரத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் அரசு அதிகாரி விவசாயிகளை திருடன் என்று கூறியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சூழ்ந்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரத்தில் 2016-2017ஆம் ஆண்டில் பயிர்காப்பீடு செய்த 11 விவசாய கிராமங்களுக்கு பயிர்காப்பீடு வழங்கப்படவில்லை என்றும், 2017-18ஆம் ஆண்டுக்கான காப்பீட்டு முற்றிலும் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயத்துறை இணை இயக்குநர் சொர்ண மாணிக்கம், விவசாயிகளை திருடன் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள், ஆட்சியரையும் அதிகாரிகளையும் முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Advertisement