பெண் மந்திரி உலகின் இளம் பிரதமரானார்

611

பின்லாந்தில் சமூக ஜனநாயக கட்சி தலைமையிலான 5 கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆண்டி ரின்னி பிரதமராக இருந்தார்.

அந்த நாட்டில் அண்மையில் நடந்த தபால் துறை வேலை நிறுத்தத்தை ஆண்டி ரின்னி சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் கூட்டணி கட்சிகளிடம் இருந்து எதிர்ப்புகள் வலுத்ததை அடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அதனை தொடர்ந்து, போக்குவரத்து துறை மந்திரியாக இருந்த, சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்த சன்னா மரின் (வயது 34) என்ற பெண் பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அடுத்த வாரம் பிரதமராக பொறுப்பு ஏற்கிறார். தற்போது உலகில் உள்ள பிரதமர்களில் மிகவும் வயது குறைந்த பிரதமர் இவர் தான். இதன் மூலம் உலகின் இளம் பிரதமர் என்ற பெருமையை சன்னா மரின் பெறுகிறார். இதற்கு முன்பு நியூசிலாந்தின் பெண் பிரதமரான ஜெசிந்தா (39) தான் உலகின் இளம் பிரதமராக இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of