இத்தனை நாட்களாக ட்ரெண்டிங்-ஆ! மாஸ்டர்

130

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளிவர இருக்கும் படம் தான் மாஸ்டர்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் சமூகவலைத்தளைத்தை அதிர வைத்தது. அதை தொடர்ந்து நெய்வேலியில் நடந்த சில பிரச்சனைகள் மற்றும் வருமான வரித்துறை செயல்கள் அங்கு தளபதி ரசிகர்களுடன் எடுத்த செல்பி போன்றவை அனைவராலும் அதிக அளவில் பேசப்பட்டு வந்தனர்.

தளபதி எடுத்த செல்பி டுவிட்டரில் இந்தியா அளவில் அதிக லைக் வாங்கின விராட் கோலியின் திருமண புகைப்படத்தை பின்னுக்கு தள்ளி தற்போது விஜய் எடுத்த செல்பி முன்னிலையில் உள்ளது.

மேலும் ரசிகர்களை மகிழ்விக்க படக்குழு ஒரு தீர்மானம் எடுத்து தளபதி ஏற்கனவே சொன்ன கருத்துகள் மற்றும் தற்போது நடந்த பிரச்சனைகளை வைத்து ஒரு குட்டி கதை என்கிற ஒரு டைட்டில் வைத்து ஒரு பாடல் வெளியானது.

அது தளபதி கருத்துகள் என்பதால் அதை தளபதியே படினார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படல் வெளிவந்து 6 நாட்கள் ஆகியும் இந்திய அளவில் சமூக வலைத்தளத்தில் முதலிடத்தில் உள்ளது.

அதை தொடர்ந்து வந்த மற்ற பாடல்கள் மறாறும் டீசர் அனைத்தும் பின்னால் தான் உள்ளது. இப்பவே இவ்வளவு சாதனை படைக்குதுனா அப்ப டீசர் அதன் பின் படம் நினைத்து பார்க்கவே முடியவில்லை.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of