நிதி உதவியை முற்றிலும் நிறுத்திய டிரம்ப்!

353

மெக்சிகோ வழியாக எல்சால்வேடர், கவுதமலா, ஹோண்டுராஸ் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து மக்கள் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்து அடைக்கலம் கோருகின்றனர்.

இதை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் எல்சால்வேடர், ஹோண்டுராஸ் கவுதமலா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வந்த நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, அதிபர் டிரம்பின் வழிகாட்டுதலின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எம்.பி.க்கள் மற்றும் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்று இந்த 3 நாடுகளுக்கு வழங்கப்படும 700 மில்லியன் டாலர் நிதி உதவி முற்றிலும் நிறுத்தப்படும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of