இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: 181 ரன்களில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்

842

ராஜ்கோட்: பிரத்வைதே தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் துவங்கியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அறிமுக வீரர் பிரித்வி ஷா, விராட் கோலி, ஜடேஜா, ரிஷாப் பாண்ட் போன்றோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 649 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய வீரர்களின் சிறப்பான பந்து வீச்சால் ரன் எடுக்க திணறி விக்கெட்டுகளை பறி கொடுத்த வண்ணமிருந்தது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 94 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ரோஷ்டன் சேஷ் மற்றும் கீமோ பால் ஆகியோர் களத்தில் இருந்தனர். இருவரும்  இந்திய அணியின் பந்து வீச்சை சமாளித்து நிதானமாக ஆடி வந்தனர். அணியின் ஸ்கோர் 147 ஆக இருக்க கீமோ பால், உமேஷ் வீசிய வேகப்பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்களும் அஸ்வின் சுழலுக்கு இரையாக வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பரிதாபத்திற்குள்ளாகியது.

இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். சமி 2 விக்கெட்டுகள், ஜடேஜா, குல்தீப், உமேஷ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும்
கைப்பற்றினர். இதனிடையே இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, விக்கெட்டுகள் இழப்பின்றி 22 ரன்கள் எடுத்து விளையாடி
வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of