கஜா புயல் 7 மாவட்டங்களுக்கு அதீத எச்சரிக்கை, 80 முதல் 90 கி,மீ வேகத்தில் காற்று வீசும்

289
kaja storm

அன்பு நேயர்களுக்கு, மழைக்கால சிறப்பு வணக்கம்…

தமிழகமெங்கும் அரசு இயந்திரம் முதல் பாமரர் வரை அனைவரும், தற்போது பரபரப்பாக பேசி வருவது, கஜா புயல் குறித்துதான்… கிட்டத்தட்ட 7 மாவட்டங்களுக்கு அதீத எச்சரிக்கையும், 10 மாவட்டங்களுக்கு மிதமான எச்சரிக்கையும் கொடுக்கப்பட்டிருப்பதால், கஜா புயலின் முக்கியத்துவத்தை கருதி, அந்தப்புயல் குறித்த தகவல்களை உடனுக்குடன் வழங்குவதற்கு சத்தியம் தொலைக்காட்சி பிரத்யேக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

கஜா புயலைத் தொடரும் சத்தியம் டிவி என்ற சிறப்பு தொகுப்பின் கீழ், கஜா புயல் குறித்த வானிலை மைய தகவல்கள், அரசு அறிவிப்புகள், எச்சரிக்கை செய்திகள், கடலோரங்களில் தற்போதைய நிலை, உடனுக்குடன் கஜா புயலின் நகர்வுகள் என அனைத்தையும் நொடிக்கு நொடி வழங்க இருக்கிறோம்…

எனவே, நேயர்களே… கஜாவின் ஆதி முதல் முடிவு வரை, கஜா புயலைத் தொடரும் சத்தியம் தொலைக்காட்சி என்ற பெயரில், புயல் குறித்த அனைத்துத் தகவல்களையும் உடனுக்குடன் வழங்க இருக்கிறோம்..

நீங்கள் மட்டுமல்ல, மற்றவர்களையும் பார்க்கச் செய்து, நாமும் அறிந்து மற்றவர்களையும் அறியம் செய்வோம்.. நன்றி… இனி கஜா சிறப்பு தொகுப்பிற்குள் செல்வோம்…