சிங்கத்தின் முன் நடனமாடிய பெண்

530

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிரான்க்ஸ் உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவுக்கு வந்த இளம்பெண் ஒருவர் பாதுகாப்பு வேலியை தாண்டி சிங்கம் இருக்கும் இடத்துக்குள் நுழைந்தார்.

அப்போது அங்கிருந்த ஆண் சிங்கம் அந்த பெண்ணை நோக்கி நெருங்கி வந்தது. ஆனால் அந்த பெண் சிறிதளவும் பயம் இல்லாமல் சிங்கத்தை நோக்கி கையசைத்து நடனமாடினார்.

அந்த சிங்கமும் பெண்ணின் அசைவுகளை வேடிக்கை பார்த்தபடி அவரை எதுவும் செய்யாமல் அப்படியே நின்று கொண்டிருந்தது. இந்த காட்சிகளை அந்த பெண்ணுடன் வந்திருந்த நபர் செல்போனில் வீடியோ எடுத்தார்.

வீடியோவை அந்த பெண் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் வெளியிட்டார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில் அபாயத்தை உணராமல் சிங்கம் இருக்கும் இடத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்த இளம்பெண் மீது பூங்கா நிர்வாகத்தினர் போலீசில் புகார் செய்துள்ளனர்.

இந்த அத்துமீறல் குறித்து விசாரணை நடத்தி வரும் நியூயார்க் போலீசார் இப்போது வரை எந்தவித கைது நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.