தமிழ் ராக்கர்ச்ஸை ஒழிக்க அரசால் மட்டுமே முடியும் – விஷால்

186

நடிகர் சங்கப் பொதுச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவருமான விஷால் தமிழக முதல்வரைச் சந்தித்தபிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர் கடந்த 2, 3-ம் தேதிகளில் இளையராஜாவுக்கு மாபெரும் இசை நிகழ்ச்சி நடந்தது. அது வெற்றிகரமான முறையில் நடைபெற்றது. விழாவுக்கு முழு பாதுகாப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவிக்க முதல்வரைச் சந்தித்தேன்.

சுமார் 25,000 பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. அதை அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் நடத்தியிருக்க முடியாது. இதற்கு நன்றி கூறிக் கடிதம் அளித்தோம். இளையராஜாவின் 1000 படங்கள் குறித்த புத்தகம் ஒன்றையும் அளித்தோம்.

ஏற்கெனவே அரசிடம் அளித்த கோரிக்கை மனுக்களை மீண்டும் அளித்தோம். குறிப்பாக தமிழ்மொழிப் படங்களின் வெளியீட்டின்போது மற்ற மொழிப் படங்கள் வெளியாகின்றன. அப்போது தமிழ்ப் படங்களுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம்.

மேலும் புதிய படங்களை இனைய தளத்தில் வெளியீடும் தமிழ் ராக்கர்ஸை ஒழிக்க தமிழக அரசால் மட்டுமே முடியும். நான் கடவுளாக நம்புகிற தமிழக அரசு நினைத்தால் இது நடக்கும்” என்றார் விஷால்.

தமிழக அரசால்தான் தமிழ் ராக்கர்ஸுக்கு முடிவுகட்ட முடியும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.