கஜா புயல் நிவாரணப் பணி மேற்கொள்ள ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை

666

கஜா புயலால் பாதிக்கப்பட்ட சேதங்களுக்கு, நிவாரணப் பணிகளுகளை மேற்கொள்ள ஆயிரம் கோடி  ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

அதன்படி, பாதிக்கப்பட்ட துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு  செய்து, அதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

அதில், மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்பு 205 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சேதம் அடைந்த வீடுகளுக்கு100 கோடி ரூபாயும்,  குடிநீர், சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளுக்காக102.5 கோடி  ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பயிர்ச்சேதம் உள்ளிட்ட விவசாய பணிகளுக்கு 350 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீன்வளத்துறைக்கு 41.63 கோடி  ரூபாயும், மின்துறைக்கு 200 கோடி ரூபாயும், உள்ளாட்சி துறைக்கு 25 கோடி ரூபாயும்,  டவுன் பஞ்சாயத்து பகுதிகளில் மீட்பு பணிகளுக்கு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர் நிதிக்கு 27 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு 25 கோடி ரூபாயும், பொதுப்பணித்துறைக்கு 10 கோடி ரூபாயும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 27.50 கோடி ரூபாயும்  ஒதுக்கீடு  என ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

 

Advertisement