ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு நடத்த பசுமை தீர்ப்பாயம் அனுமதி

554

தருண் அகர்வால் தலைமையிலான குழுவின் ஆய்வை ஒத்திவைக்க கோரி மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியதை எதிர்த்து வேதாந்தா குழுமம் தேசிய தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது குறித்து முடிவெடுக்க ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் தருண் அகர்வால் தலைமையிலான குழுவை, தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்தது.

இதை தொடர்ந்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை தொடர்ந்து மனுவை மறு ஆய்வு செய்ய கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் தருண் அகர்வால் தலைமையிலான குழு வரும் 22-ஆம் தேதி முதல் 3 நாட்கள் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே, தருண் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க கோரி மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.