ஜிம் போறவங்க இனி ஜாக்கிரதையா இருங்க! 6 வயது சிறுவன் பலி!

329

டெல்லி இண்டர்பூரி ஜேஜே காலனியில் உள்ள ஒரு கட்டிடத்தில் உடற்பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது.

இந்த மையத்திற்கு மேல் வீடுகள் உள்ளன. நேற்றிரவு திடீரென நான்கு மர்ம நபர்கள் இந்த ஜிம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்.

இதில் ஜிம் பலத்த சேதம் அடைந்தது. அப்போது ஜிம்மிற்கு மேல் உள்ள வீட்டில் பிரின்ஸ் ராஜ் என்ற 6 வயது சிறுவன் இருந்துள்ளான். மர்ம நபர்கள் சுட்டதில் ஒரு குண்டு பிரின்ஸ் மீது பாய்ந்து, அவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், பிரின்ஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.