நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

121
சிபிஐ விசாரணை கோரும் வழக்கில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்றதாக கைது செய்யப்பட்ட நிர்மலா தேவியை நாளை பிற்பகல் ஆஜர்படுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
நிர்மலாதேவி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.   நிர்மலா தேவி தொடர்பான வழக்குகளும், அவருடைய ஜாமீன் வழக்குகளும் நாளை விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்மலா தேவி விவகாரத்தில் 3 பேரை மட்டுமே கைது செய்துள்ளனர். உரிய விசாரணை நடைபெறவில்லை என மனுதாரர் விளக்கம் அளித்துள்ளார்.
நிர்மலா தேவிக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்க முடியவில்லை  என நிர்மலா தேவி தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சுகந்தி என்பவர் தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நாளைக்கு ஒத்திவைத்தது.