பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

227

 

கலவர வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூரில் கடந்த 1998ம் ஆண்டு நடந்த கலவரத்தில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலகிருஷ்ண ரெட்டி மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், தற்போதைய நிலையில் இடைக்கால மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என தெரிவித்தது.

மேலும் பாலகிருஷ்ண ரெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுத்ததால் பாலகிருஷ்ண ரெட்டியின் எம்.எல்.ஏ. தகுதி இழப்பு நீடிக்கிறது.