தமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது | Stalin | IIT

216

ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐஐடி மாணவி பாத்தீமா லத்தீப் தற்கொலை அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். கல்வி நிலையங்களை காவிமயமாக்கும் போக்கை தவிர்த்து, அனைவரையும் சம உரிமையுடன் நடத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

சமமான உயர்கல்வியுடன் அனைவரையும் நடத்தும் போக்கு ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் மேம்பட ஆவண செய்ய வேண்டும் என்றும், மாணவி பாத்திமா லத்தீப் மரண வழக்கை நியாயமான, நேர்மையான விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவி தற்கொலை குறித்த வழக்கின் விசாரணைக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் இருந்து இத்தகைய சர்ச்சை எழுவது புதிது அல்ல என்றும், மாணவி பாத்திமா லத்தீப்பின் பெற்றோரின் கூற்று, தமிழ் மண் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை தகர்க்கப்பட்டதை காட்டுவதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of