குவியல் குவியலாக மனித எலும்புக் கூடுகள் மன்னார் பகுதியில் 80வது நாளாக அகழாய்வு பணி தொடர்கிறது

612

இலங்கையில் மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை151 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 17 எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் கடந்த மார்ச் மாதம் “சதொச” கட்டிடத்தை விரிவுப்படுத்துவதற்காக பள்ளம் தோண்டிய போது, மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து மன்னார் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ​மே மாதம் 28 ஆம் தேதி முதல் அங்குள அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன.

மன்னார் மாவட்ட நீதிபதி சரவணராஜா மேற்பார்வையில், சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் அகழாய்வு பணிகள் தொடர்ந்து 79 நாட்களாக நடைபெற்று வருகிறது. பல்வேறு கேள்விகள் சந்தோகங்களை ஏற்படுத்தக் கூடிய

வகையில் அங்கிருந்து ஏராளமான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன. மீட்கப்பட்ட எலும்புக் கூடுகள் கை, கால் கட்டப்பட்டும், ஒரே இடத்தில் மொத்தமாகவும் இருப்பதால், இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில் மன்னார் மனித புதைகுழியிலிருந்து இதுவரை151 மனித எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், அதில் 17 எலும்புக் கூடுகள் சிறுவர்களுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement