ஷாம்பு வாங்க பணம் கேட்டது குத்தமாய்யா? மனைவியை உதைத்த கணவர்!

669

அஹமதாபாத்தில் பாவ்லா கிராமத்தில் உள்ள காவல்நிலையத்தில், ஒரு பெண் தன் கணவர் மீது, புகார் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியுள்ளதாவது:-

“நான் ஷாம்பு வாங்க பணம் கேட்டேன், அதற்கு என் கணவர் என்னை தாக்கி சுவற்றில் தள்ளி கொடூரமாக தாக்கினார்.

அதன்பின்னர் நான் அபாயம் என்ற பெண்கள் அவசர (181) உதவிமையத்துக்கு தொடர்புகொண்டு இது பற்றி கூறினேன்.

அதன் பின்னர் ஒரு பெண் என் வீட்டுக்குக் வந்து என் கணவனிடம் என்னை சரியாக நடத்துமாறு கூறினார். அதற்கு சரியாக முக்கியத்துவம் தராத என் கணவர் என்னை வீட்டை விட்டு வெளியேறு படி கூறினார்.

அதனால் நான் விராம்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.”

என்று அதில் குறிப்பிட்டிருக்கிறார்.

அந்தப் பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார் பெண்ணின் கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement