உணவு சரியில்லை என மனைவியை கொன்ற கணவன்

146

ஒசூர் அருகே அத்தல்வாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜப்பா, ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

அவருக்கு மனைவி லட்சுமி உணவு எடுத்துச் சென்றபோது, உணவு சரியில்லை எனக் கூறி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவி லட்சுமியின் தலையில் ராஜப்பா கல்லைப் போட்டு கொலை செய்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த சம்பவம் நடந்த நிலையில், ராஜப்பா தமக்கு தெரியாதது போல் இருந்துள்ளார். உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபோது ராஜப்பா மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது.

ராஜப்பாவிடம் போலீசார் விசாரித்த போது, அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். 6 மாதங்களாக எல்லோரையும் ஏமாற்றி வந்த ராஜப்பாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of