மார்ச் 30, 31-இல் வருமான வரித் துறை அலுவலகம் இயங்கும்

604

தமிழகத்தின் அனைத்து வருமான வரித்துறை அலுவலகங்களும் மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயங்கும் என, முதன்மைத் தலைமை வருமான வரி (சென்னை) கூடுதல் ஆணையர் ஆர்.இளவரசி தெரிவித்தார். 

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : 2018-19 ஆம் நிதியாண்டுக்கான தாமதிக்கப்பட்ட மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிப் படிவங்களை மார்ச் 31 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.

இதனால் வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில் வருமான வரி அலுவலகம் வழக்கம் போல் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்றும்(மார்ச் 30) மற்றும் நாளையும் (மார்ச் 31 ) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வருமான வரித்துறை மண்டல அலுவலகங்களும் வழக்கமான வேலை நேரத்தில் இயங்கும் என்றும், பொதுமக்களின் வசதிக்காக இயக்கப்படும் இந்த அலுவலக நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement