5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற போராட்டம்

489

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு கடலோர மாவட்ட மீனவர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர்.

ராமநாதபுரத்தில் நடைபெற்ற அனைத்து மீனவசங்க கூட்டத்தில் பல்வேறு பகுதியை சேர்ந்த மீனவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில், நாளுக்கு நாள் டீசல் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த வேண்டும், மானிய டீசலின் அளவை அதிகரித்து வழங்க வேண்டும்.

இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து மீனவ சங்கம் அறிவித்துள்ளது.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்படும்.

சுமார் ஒரு லட்சம் மீனவர்களும், 50 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாலர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது