புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது

216
Chennai High Court

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநர் தலையிடுவது கேலிக்கூத்தானது என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

இது தொடர்பான வழக்கு நீதிபதி மகாதேவன் முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதிட்டார்.

அப்போது அரிதிலும் அரிதான அரசின் நடவடிக்கைகளில் மட்டுமே துணை நிலை ஆளுநர் தலையிட முடியும் எனவும், மாறாக அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது கேலிக்கூத்தானது என்று சிதம்பரம் தெரிவித்தார்.

மேலும், ஒவ்வொரு விஷயத்துக்கும், அதிகாரிகளிடம் இருந்து ஆவணங்களைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் அனைத்து அதிகாரங்களை மீறி, துணை நிலை ஆளுநரால் செயல்பட முடியாது என்றும், அதற்கு அவருக்கு அதிகாரமும் இல்லை எனவும் ப.சிதம்பரம் வாதிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here