காஷ்மீர் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையேயான பிரச்சனை – அதிபர் டிரம்ப்

220

ஜம்மு காஷ்மீர் விவகாரம் இந்தியா- பாகிஸ்தான் இடையேயான பிரச்சனை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக, பிரதமர்  மோடி கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற ஜி -7 மாநாட்டில், சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். மாநாட்டின் இடையே அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

இந்த சந்தி்ப்பின்போது, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சந்திப்பு குறித்து பேசிய நரேந்திர மோடி, ஜம்மு – காஷ்மீர் விவகாரம் இந்தியாவுக்கும்,பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சனை என அதிபர் டிரம்ப் ஒப்புக்கொண்டதாக கூறினார்.

இருதரப்பு பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக்கொண்டார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of