2 பெண் சிசு கருகலைப்பு.. 6 கொலைகள்.. பலரை கொல்ல திட்டம்.. – ஜோலியின் மிரள வைக்கும் வாக்குமூலம்..!

425

கேரளாவில் நடந்த சீரியல் கொலையில் நாளுக்கு நாள் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளிவருகின்றன. ஜோலி என்ற 47 வயதுப் பெண் சொத்துக்காகத் தன் குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2002-ல் மாமியார் அன்னமாவை விஷம் வைத்து கொலை செய்கிறார். அடுத்து சொத்துக்காக மாமனாரை கொலை செய்கிறார். சுதந்திரமாகச் செயல்பட விடாமல் தடுத்த கணவரை கொன்றிருக்கிறார்.

இந்த மரணங்களில் சந்தேகம் எழுப்பிய உறவினர் மேத்தீவை கொன்றுவிட்டார். உறவினர் சாஜூ மீது கொண்ட காதலால் அவரின் மனைவி மற்றும் 2 வயது மகளைக் கொலை செய்தார்.

17 வருட இடைவெளியில் 6 கொலைகளை நிகழ்த்தியுள்ளார். இதன் பின்னர் ஜோலி மற்றும் சாஜூ இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

ஜோலியின் கணவரின் சகோதரர் கொடுத்த புகாரின் பேரில் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததுள்ளது. இந்தச் சம்பவத்தில் ஜோலி, சாஜூ மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஜோலியின் குடும்பத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள கல்லறைகளில்தான் புதைக்கப்பட்டனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமைதான் கல்லறையில் புதைக்கப்பட்ட உடல்களைத் தோண்டி எடுக்க உத்தரவு கிடைத்தது.அதன்படி அங்கு புதைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்களையும் காவல்துறையினர் தோண்டி எடுத்தனர். நகையைப் பிரிக்க பயன்படும் சைனைடு கொடுத்துதான் இந்தக் கொலைகளைச் செய்ததாக ஜோலி காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

தோண்டி எடுக்கப்பட்ட உடல்கள் அனைத்தும் 3 வருடத்திலிருந்து 17 வருடங்களாக மண்ணில் இருந்துள்ளது. ஒருமுறை வீட்டில் உணவு அருந்தியபோது எனக்குக் கடுமையாக வாந்தி ஏற்பட்டது.

நான் உடனடியாக அதிகமாகத் தண்ணீர் குடித்த பிறகுதான் இயல்பு நிலைக்குத் திரும்பினேன். ஜோலிக்கு பெண் குழந்தைகள் என்றால் பிடிக்காது. இதன்காரணமாக அவர் இரண்டு முறை கருக்கலைப்பு செய்துள்ளார்.

ஆனால் கர்ப்பமாய் இருக்கும் போது என்ன குழந்தை பிறக்கும் என்று முன்கூட்டி அறியாக் கூடாது என்று சட்டம் இருந்தும் சட்டத்தை மீறி சோதனையிட்டு கூறிய கிளினிக் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கைதான சாஜூ நேற்று காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “நானும் ஜோலியும் திருமணம் செய்துகொள்ள என் மனைவி மற்றும் குழந்தைகள் தடையாக இருப்பதாக ஜோலி கூறினார்.இதனால் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தோம். ஜோலி என் மூத்த மகனையும் கொலை செய்ய வேண்டும் என்றார். நான்தான் வேண்டாம் என்று தடுத்தேன்.

என் குடும்பத்தினர் மகனைப் பார்த்துக்கொள்வார்கள் எனக் கூறி ஜோலியை சமாதானம் செய்ததாகத் தெரிவித்தார். காவல்துறை அதிகாரிகள் பேசுகையில் ஒவ்வொரு மரணமும் ஜோலிக்கு தைரியத்தைக் கொடுத்துள்ளது.

அதுதான் அவரை அடுத்தடுத்த கொலைகளை நிகழ்த்துவதற்கு அதிகப்படியான தைரியத்தைக் கொடுத்திருக்கிறது என்றனர். கைதானவர்களிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.