அமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர்கள் இரங்கல்

696

அமிர்தசரஸ் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அமிர்தசரசில் ரயில் விபத்து நடந்த இடத்தை முதல்வர் அமிரீந்தர்சிங் நேரில் பார்வையிட்டார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் இழப்பீடு வழங்ககப்படும் என அவர் அறிவித்தார்.

மேலும், மத்திய அரசும் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

ரயில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரயில் விபத்தில் பலியானவர்கள் குறித்த செய்தி இதயத்தை உருக்குகிறது என்றும் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யும் படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனிடையே அமெரிக்க நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் இந்தியா திரும்புகிறார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of