சிகிச்சை பலனின்றி மேலும் 2 சிங்கங்கள் பலி

529

குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் கடந்த 3 வாரங்களில் மட்டும் மர்மமான முறையில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான ஆசிய சிங்கங்கள் இருக்கின்றன. இந்த சிங்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால் இதை அழிந்துவரும் இனங்களில் ஒன்றாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வனப்பகுதியில் கடந்த மாதம் 12-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலான காலத்தில் 11 சிங்கங்கள் மர்மமான முறையில் உயிரிழந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து அடுத்த சில தினங்களில் மேலும் 3 சிங்கங்கள் உயிரிழந்தன. இதற்கிடையே, நோய்வாய்பட்ட நிலையில் இருந்த 7 சிங்கங்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டன.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவை அனைத்தும் உயிரிழந்தன. இதனால் பலியான சிங்கங்களின் எண்ணிக்கை 21 ஆனது. இந்நிலையில், நேற்று இரண்டு சிங்கங்களை மீட்டு வனத்துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவை இறந்து போயின.

இதைத்தொடர்ந்து, கிர் காட்டில் உயிரிழந்த சிங்கங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of