‘தி லயன் கிங்’ – 25 வருடம் கழித்து மீண்டும் அரவிந்த் சாமி

524

1994 அனிமேஷன் வெர்சனில் வெளியான திரைப்படத்தின் புதிய பதிப்பு தான் ‘தி லயன் கிங்’. டிஸ்னி நிறுவனத்துக்கு இது ஒரு ஸ்பெஷலான படம். இது ஒரு குடும்ப உணர்வுகளை பேசும் படம். கதை சொல்லும் விதம் தனித்துவமாக இருக்கும். தந்தை, மகன் பாசம் தான் படத்தின் கரு.

இந்திய மக்கள் பார்த்து மகிழ அவரவர் மொழிகளில் திரைப்படத்தை வெளியிடும் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் பதிப்பில் தமிழின் சிறந்த கலைஞர்களான அரவிந்த்சாமி (ஸ்கார்), சித்தார்த் (சிம்பா), ரவிஷங்கர் (முஃபாஸா), ஐஸ்வர்யா ராஜேஷ் (நாளா), ரோகிணி, சிங்கம் புலி (டிமோன்), ரோபோ சங்கர் (பும்பா), மனோபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்கள்.

ஜங்கிள் புக் இயக்குனர் ஜான் ஃபேவரூ மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் இந்த கதையை படமாக கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் முதன்முறையாக ஃபோட்டோ ரியல் என்ற புதுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளனர். வரும் 19ஆம் தேதி இந்த திரைப்படம் உலகமெங்கும் வெளியாகிறது.

25 வருடங்களுக்கு முன்பு சிம்பாவுக்கு டப்பிங் குரல் கொடுத்தேன். ஒரு புதுமையான அனுபவத்துக்காக அப்போது டப்பிங் செய்தேன். ஸ்கார் தான் கதையை சுவாரஸ்யமாக்கும் ஒரு கதாப்பாத்திரம். நிறைய கலவையான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். ஒரு நடிகன் என்றாலே எல்லா விதமான விஷயங்களையும் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதால் பலவிதமான உணர்வுகளை வெளிப்படுத்த முடியும். நிறைய கற்றுக் கொள்ள முடியும். வில்லன் கதாபாத்திரத்துக்கு டப்பிங் பேசும்போது குரலில், பேச்சு வழக்கில் நிறைய வித்தியாசங்களை செய்ய முடியும். நிச்சயம் குழந்தைகளை அழைத்துக் கொண்டு குடும்பத்துடன் போய் பார்க்கும் படமாக இது இருக்கும் என்றார் நடிகர் அரவிந்த்சாமி.