ஓய்ந்தது பிரச்சாரம், தொடங்கியது கட்டுப்பாடு

267

தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 13 மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தற்போது ஓய்ந்தது. கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கிய பிரச்சாரம் இன்று ஓய்ந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 13 மாநிலங்களில் 97 தொகுதிகளில் நாளைமறுநாள் வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

நாளை எந்த தேர்தல் பணியிலும் அரசியல் கட்சியினர் ஈடுபட கூடாது. வாக்காளர்களுக்கு பூத்-சிலிப் கொடுக்கும் பணி நாளை தீவிரமாக நடைபெறும்.

நாளை மறுநாள் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறுவதால் அங்கு மட்டும் இரவு 8 மணி வரை பொதுமக்கள் ஓட்டுப்போடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. பாராளுமன்ற தேர்தலில் 845 வேட்பாளர்களும், சட்ட சபை தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of