“The Lungs of Earth” அமேசான் ! “மண்ணுலகின் சொர்கம்”

467

அமேசான் ! 5.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் பறந்து விரிந்திருக்கும் உலகத்தின் மிக பெரிய வெப்பமண்டல காடு. நமது இந்தியாவைப்போல ஏறத்தாழ இரண்டு மடங்கு என்றே சொல்லலாம்.

அமேசான் காடுகள் சவுத் அமெரிக்கா தொடங்கி பிரேசில், பொலிவியா, பெரு, எக்குவடோர், கொலம்பியா, வெனிசுலா, கயானா, சுரினமே இப்படி பல இடங்களில் பறந்து விரிந்துகிடக்கிறது.

அதேபோல அமேசான் காட்டின் வழி செல்லும் அமேசான் நதி உலகின் மிக நீளமான நதி என்கின்ற பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. சுமார் 6,400 கிலோமீட்டர் தூரம் இந்த நதி ஓடுகிறது.
amaozn-river2007ம் ஆண்டு ஒட்டுமொத்த அமேசான் நதியையும் மார்ட்டின் என்பவர் நீந்தி கடந்தார், ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நீந்தி கிட்டத்தட்ட 66 நாட்களில் அவர் தனது இலக்கை அடைந்தார்.

அமேசான் காடுகளை பொறுத்தமட்டில் 400 முதல் 500 அமெரிக்கஇந்திய பழங்குடி மக்களின் வாழ்விடமாக திகழ்கிறது, இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் இதுவரை வெளிஉலகிற்கு அறிமுகமாகாதவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமேசான் உலகின் மிகவும் செழிப்பான சுற்றுசூழலை கொண்டது, ஏறத்தாழ 40,000 செடி வகைகள் இங்கு உள்ளன. இவற்றில் பல உலகில் வேறெங்கும் வளர்வதில்லை, அமேசான் 1,300 பறவை வகைகளுக்கும், 3,000 வகை மீன்களுக்கும், 430 பாலூட்டிகளுக்கும், அதுமட்டுமல்லாமல் ஆச்சர்யப்படவைக்கும் வகையில் 2.5 மில்லியன் பூச்சி இனங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

amazon-parrots

அமேசான் பல கண்கவர் உயிரினங்களுக்கும் அதேசமயம் உயிரைக்கொல்லும் சில ஆபத்தான உயிரினங்களுக்கும் வாழ்விடமாக திகழ்கிறது, இதில் மின்சார ஈல், சதை உண்ணும் பிராணா, விஷ தேரைகளும் அடக்கம்.

பிறருகு, அமேசான் நதியில் வாழ்கின்ற ஒரு மீன்வகை, 3 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த மீனுக்கு மேல் அன்னத்தில் மட்டும் அல்லாமல் தனது நாக்கிலும் பற்கல் உண்டு.

pirarucu

உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த ப்ரணவாய்வின் அளவில் அமேசான் காடுகள் 20 சதவிகிதத்திற்கும் மேல் உற்பத்திசெய்கின்றன . இதன் செழுமைமிகு அழகினால் அமேசானை “The Lungs of Earth” என்று அழைக்கின்றனர்.

அமேசான் மரங்கள் மிக அடர்த்தியான கிளைகளையும், இலைகளையும் கொண்டதால் அமேசானின் தரைப்பகுதி எப்போதும் இருள்சுழந்தே இருக்கின்றது, இயற்கை அன்னையின் எந்த ஒரு மாற்றமும் அது மழையோ, வெயிலோ, பணியோ அது அமேசான் நிலத்தை அடைய குறைந்தது 10 நிமிடங்கள் ஆகும்.