மீண்டும் பாஜக ஆட்சியா? முக்கிய டிவி சேனல்கள் வெளியிட்ட கருத்துக்கணிப்பு!

560

மக்களவை தேர்தல் முடிந்ததால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கும் அளவிற்கு பெரும்பான்மையை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Times Now வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 306 தொகுதிகள் வரையில் வெற்றி பெறும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 132 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பிற கட்சிகள் 104 தொகுதிகளில் பெற்றி பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Republic tv வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணி 287 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 128 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 127 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNN 18 வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில், பாஜக கூட்டணி 286 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 122 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 134 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

NDTV வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 303 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 126 தொகுதிகளிலும், மற்றவை 113 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

India Today வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜக கூட்டணி 242 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கூட்டணி 164 இடங்களை கைப்பற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது. மற்றவை 136 இடங்களில் வெற்றி பெறும் என்றும் India Today கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of