புதுச்சேரியில் காவலர்களுக்கும் கட்டாய தலைக்கவசம் – தவறினால் கடும் நடவடிக்கை

660

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் செல்லும் காவலர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில டி.ஜி.பி. சுந்தரி நந்தா தெரிவித்துள்ளார். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்

இதுதொடர்பாக நேற்று அவர் பிறப்பித்த உத்தரவில், புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் அனைத்து காவலர்களும் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

தலைக்கவலசம் அணியாத காவலர்களின் புகைப்படங்கள், முதல் முறை காவலர்கள் வாட்ஸ் அப் குரூப்பில் பகிரப்படும் என்றும், இரண்டாவது முறை தவறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

சட்டத்தை செயல்படுத்த கூடிய இடத்தில் உள்ள காவலர்கள், தலைகவசம் அணிந்து மற்றவர்களுக்கும் எடுத்துகாட்டாக விளங்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of