தனியார் நிறுவனத்தின் ஓட்டுநரை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை

541

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கு 3 மகன்கள் உள்ளனர்.

இவர்களது 3-வது மகன் உதயசங்கர் என்பவர் தனியார் மருந்து நிறுவனத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்றிரவு 8 மணி அளவில், ரெட்டியார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள மருந்தகத்தில், மாத்திரை வாங்கி விட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், உதயசங்கரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது.

தகவலறிந்து வந்த ரெட்டியார்பாளையம் போலீசார் உதயசங்கர் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

அதே பகுதியை சேர்ந்த பழனி, ராமு, சின்ன சக்திவேல், பெரிய சக்திவேல் ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முதல் கட்ட விசாரணை தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of