காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தர கோரி காவல் நிலையத்தில் புகார்

76

திருப்பூர் திருநீலகண்டபுரம் பகுதியில்  உள்ள கிணற்றை அப்பகுதி  மக்கள் நீண்ட நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளனர்.இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் கிணற்றை மூடி அதில் வீடு கட்டும் பணியை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள்,  காணாமல் போன கிணற்றை கண்டுபிடித்து தர கோரி திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் அளித்தனர்.