யானைகளை கொன்று குவித்த கும்பல்

162

கடந்த 2011 ஆம் ஆண்டு மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் 3 ஆண் யானை சிறுமுகை வனப்பகுதியில் 1 ஆண் யானை என மொத்தம் 4 யானைகள் வேட்டையாடப்பட்டு அவற்றின் தந்தங்கள் வெட்டி எடுக்கப்பட்டிருந்த‌ன.

இதேபோல, வருசநாடு வனப்பகுதியில் 3, சீகூர், வல்லக்கடவு பகுதிகளில் தலா ஒன்று என யானைகள் தொடர்ந்து கொன்று குவிக்கப்பட்டு வந்தன. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் வனத்துறையினருக்கு மிகவும் சவாலாக அமைந்த‌து.

இந்த நிலையில், சீகூர் வனப்பகுதியில் யானைகளை வேட்டையாடும் முயற்சியில் ஈடுபட்ட  குபேந்திரன், சிங்கம் என இருவர் கைது செய்யப்பட்டனர்.   இந்த கும்பலின் தலைவனான பாபுஜோஸ் 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் வழக்கு ஒன்றுக்காக கோவை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்திற்கு அவர் வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் நீதிமன்ற வளாகத்தில் ஆங்காங்கே மறைந்திருந்த வனத்துறையினர் நீதிமன்றம் அருகே உள்ள டீ கடையில் வைத்து பாபு ஜோஸை சுற்றி வளைத்து பிடித்தனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of