மோடி அரசு அவர் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது

201

பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான அரசு, அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம்,  ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, ப.சிதம்பரத்திற்கு எதிராக சி.பி.ஐ. அமலாக்கத்துறை மற்றும் முதுகெலும்பில்லாத ஊடகங்களை பயன்படுத்துகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

அதிகாரத்தை மத்திய அரசு துஷ்பிரயோகம் செய்வதற்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டிருப்பதற்கு ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of