பெண் மருத்துவர் கொலையை தொடர்ந்து மீண்டுமொரு கொலை

1076

ஹைதராபாத்தின் ஷாத்நகரை சேர்ந்த பெண் மருத்துவர் பிரியங்கா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக போலீசார் 4 பேர் கைது செய்துள்ளனர். இந்த கொடூர கொலையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சித்துலகுட்டா சாலையில் உள்ள ஷாம்ஷபாத் பகுதியில் மேலும் ஒரு பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் 35 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த பெண் யார் என்பதும், அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பதும் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

Advertisement