புயல் நிவாரண முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் மர்ம மரணம்

198
nagai

நாகையில், புயல் நிவாரண முகாமில் இருந்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் காவல் நிலையத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திருக்கோழி அருகே மேல வாழக்கரை கிராமத்தில் உள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த நிவாரண முகாமில், முத்து கிருஷ்ணன் என்பவர் குடிபோதையில் அங்கிருந்தவர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் முத்துக்கிருஷ்ணனை நேற்று விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் அதிகாலை முத்துக்கிருஷ்ணனை எழுப்பிய காவல்துறையினர், அசைவற்று இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை தொடர்ந்து காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, முத்துகிருஷ்ணனின் உடல் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்விற்காக கொண்டுவரப்பட்டது.

விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் லாக்கப்பில் உயிரிழந்ததில் சந்தேகம் உள்ளதாக அவரது உறவினர்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here