தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் தேவை – தமிழக அரசு

159
tamilnadu-government

பயிற்சி மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் என்ற பெயரில் குறைந்த ஊதியத்திற்கு தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுக்க, தமிழக அரசு கொண்டு வந்த தொழிலக வேலைவாய்ப்பு சட்டம் 2008-ல் உரிய விதிகளை உருவாக்கி, சட்டத்தை அமல்படுத்த கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில், தொழிலாளர்கள் நலச் சட்டத்தில் மத்திய அரசு சில சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளதால், அதன்பின்னர், தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு  நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, தொழிலக வேலைவாய்ப்பு சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

எனவே சட்டத்தை அமல்படுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை இரண்டு  வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here