அணையில் உடைந்த மதகை வைக்கோலை கொண்டு அடைக்க அதிகாரிகள் புதிய முயற்சி

595

பாலமேடு அருகே சாத்தியார் அணையில் உடைந்த மதகை வைக்கோலை கொண்டு அடைக்கக்கூறிய பொதுப்பணித்துறை அதிகாரிகளின் சமயோஜித யோசனை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியார் அணை 8 ஆண்டுகளுக்கு பிறகு முழு கொள்ளளவை எட்டியுள்ளது.

ஆனால், பழுதடைந்த நிலையில் உள்ள 2 மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி வருகிறது.

அணையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் நடராஜன், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம் ஆகியோர் உடனடியாக மதகுகளை அடைக்க உத்தரவிட்டனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகளின் யோசனையின் படி, சேதம் அடைந்த மதகை வைக்கோல் கொண்டு அடைக்க முயற்சித்தனர்.

அணையிலிருந்து வெளியேறும் நீரை வைகோலை பயன்படுத்தி தடுக்க அதிகாரிகள் எடுத்த இந்த முயற்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிகாரிகளின் இந்த செயல் நீர் ஆவியாகாமல் இருக்க அமைச்சர் செல்லூர் ராஜூ தெர்மாகோலை பயன்படுத்தியதை நினைவுப்படுத்துவதாக சமூக வலைத்தள வாசிகள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Advertisement