வைரலாகிறது ரசிகர்கள் உருவாக்கிய ரஜினியின் புதிய தோற்றம்!

760

ரஜினிகாந்த் அடுத்த படத்துக்கு தயாராகி உள்ளார். இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். திரைக்கதை உருவாக்கும் பணி முடிந்துள்ளது. படப்பிடிப்பு மார்ச் மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.இந்த படம் பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் படத்தை பற்றி பல்வேறு தகவல்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. கதாநாயகியாக நடிக்க கீர்த்தி சுரேசை பரிசீலிப்பதாக கூறப்படுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் முந்தைய பட்ங்களில் அதாவது  ரமணாவில் லஞ்சத்தையும், கத்தியில் விவசாயிகள் பிரச்சினைகளையும் சர்காரில் அரசியல்வாதிகள் முறைகேடுகளையும் முருகதாஸ் சொல்லி இருந்தார்.

ரஜினிகாந்த் படம் முழு அரசியல் கதையாக இருக்கும் என்று தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் முருகதாஸ் இயக்கும் புதிய படத்துக்காக ரஜினிகாந்தின் தோற்றத்தை ரசிகர்கள் உருவாக்கி இணையதளங்களில் பரவலாக வைரலாக்கி உள்ளது.

இப்போஸ்டரில் ரஜினி கண்களில் கருப்பு கண்ணாடி, வெள்ளைத்தாடி, வாயில் சுருட்டுடன் இந்த போஸ்டரை வடிவமைத்து உள்ளனர். உண்மையான படத்தின் போஸ்டர் போலவே  ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இதனை பரப்பி வருகிறார்கள்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of