திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது

526

புதிய திரைப்படங்களை திருட்டுத்தனமாக படம்பிடித்து வெளியிட்ட 10 திரையங்குகளில் இனி புதுப்படம் ரிலீஸ் செய்யப்படாது என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதிய திரைப்படம் வெளியிட்ட அன்றைய தினமே பைரசி முலம் இணையத்தில் வெளியிடப்படுவதாகவும், இது திரையரங்குகளில் இருந்து தான் திருட்டுத்தனமாக படம் பிடிக்கப்பட்டு வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணகிரி முருகன், கிருஷ்ணகிரி நயன்தாரா, மயிலாடுதுறை கோமதி, கரூர் எல்லோரா, ஆரணி சேத்பட் பத்மாவதி, கரூர் கவிதாலயா, பெங்களூரு சத்யம், விருத்தாசலம் ஜெய்சாய் கிருஷ்ணா, மங்களூர் சினிபொலிஸ் உள்ளிட்ட திரையரங்குகளில் இனி புதுப்படங்கள் எதுவும் வெளியிடப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 17 மற்றம் 18ம் தேதிகளல் வெளியாகும் எந்த புதிய திரைப்படமும் இந்த திரையரங்குகளில் வெளியாகாது என்றும் கூறப்பட்டுள்ளது.